சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்

Report Print Vethu Vethu in அரசியல்

புத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வனாத்தவில்லு பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அருவக்காலு கழிவு தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியமையினால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சந்திரிக்கா, குமார் வெல்வகம உட்பட சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் இறுதியில் புத்தளத்தை சேர்ந்த சிலர் அருவக்காலு கழிவு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டதுடன், சந்திரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் வினவியுள்ளனர்.

இதன்போது அருவக்காலு கழிவிற்கு எதிர்ப்பு வெளியிட்டவர்கள், வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாகவும், இவ்வாறான நடவடிக்கை காரணமாக மேலும் 5 வருடங்களில் இந்த கிராமத்தை விட்டு செல்லும் நிலை மக்களுக்கு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் இதற்கு தீர்வு வழங்கப்படும் என சந்திரிக்கா குறிப்பிட்டமையினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்ப்பு வெளியிட்டவர்களுக்கு மற்றுமொரு தரப்பினர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.