ஷரியா பல்கலைக்கழகம் குருகுலமாக மாறி விட்டதா? ரில்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

ஷரியா பல்கலைக்கழகம் தற்போது பௌத்த குருகுலமாக மாறி விட்டதா என்ற கேள்வி நாட்டில் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கடந்த காலங்களில் மட்டக்களப்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நிர்மாணித்து வரும் ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடுமையான போராட்டங்களை நடத்தி, முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

எனினும், தற்போது அந்த போராட்டங்கள் நின்று போயுள்ளன. ஹிஸ்புல்லாவும், ரதன தேரரும், கோத்தபாய ராஜபக்சவின் ஒரே மேடையில் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.