தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்திய நான்கு தூதரகங்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கொழும்பில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் தனித்தனியாக கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இந்த கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளதுடன் அதன் இறுதி அறிக்கையை நாளை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக அந்த தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா வடக்கு மாகாணத்தை இலக்கு வைத்து தனது கருத்து கணிப்பை நடத்தியுள்ளதாகவும் ஏனைய நாடுகளின் தூதரகங்கள் நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.