ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து நுவரெலியாவில் பிரச்சார கூட்டம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம் இன்று காலை நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தலைமையில் இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதில் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், சீ.பீ.ரத்நாயக்க, ஆறுமுகன் தொண்டமான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலும் அமுனுகம, சதாசிவம், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், நிமல் பியதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினுடைய நுவரெலியா மாவட்ட இளைஞர் அணியுனுடைய செயலாளர் மணித் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.