சந்திரிக்கா திட்டியமைக்காக நான் குழம்ப மாட்டேன்! தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த அந்த கட்சியின் கொள்கையே காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர,

நான் நேசிக்கும் சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார் அண்மையில் என்னை திட்டி பேசியிருந்தார். அதற்காக நான் குழம்ப மாட்டேன்.

குமார வெல்கம என்னை திட்டி பேசியிருந்தார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியது 68 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைக்க அல்ல என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெற ஒன்றாக மனதோடு இணைந்துள்ளோம் என தயாசிறி ஜயசேர குறிப்பிட்டுள்ளார்.