கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித்

Report Print Navoj in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலான, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோகித போகல்லாகம, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.