ஓய்வுபெறும் மைத்திரிக்காக விசேட வைபவம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளதை முன்னிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் விசேட உத்தியோகபூர்வ வைபவம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வைபவத்தில் ஜனாதிபதி விசேட விருதுகளை வழங்க உள்ளதுடன் சிறுவர்களுக்காக லொத்தர் சீட்டு ஒன்றையும் ஆரம்பித்து வைக்க உள்ளார்.

இதனையடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் மதிய போசன விருந்து வழங்கப்பட உள்ளது. இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளும் இறுதியான அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.