வெற்றி பெற போவது யார் ? புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற விடயம் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவுகள் தயாரித்த புதிய இரகசிய அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக புலனாய்வு பிரிவின் கருத்து கணிப்புகளில் கலந்துக்கொண்டவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்க தயங்கியதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான அரச புலனாய்வு பிரிவு தயாரித்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் வெளியாகிய புள்ளி விபரங்கள் மற்றும் அறிக்கைகள் முற்றிலும் தவறானவை எனவும், சரியான புலனாய்வு பிரிவின் அறிக்கை ஜனாதிபதியிடம் மட்டுமே இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பை நடத்த புலனாய்வு பிரிவினருக்கு ஜனாதிபதி உத்தரவிடவில்லை என இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.