நான் ஒரு சண்டைக்காரன்! சஜித்தின் பிரச்சார மேடையில் மனோ கணேசன் பகிரங்க அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

யுத்தத்தின் காரணமாக அதிகளவில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இழந்தவை அநேகம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு பகுதியில் இன்றையதினம், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ஒருவருக்கு வாக்களித்துவிட்டு வெளியே நின்று வேடிக்கைப் பாரத்துக் கொண்டிருக்கும் அவலநிலை இனிமேல் மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு வேண்டாம்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் கிழக்கு மாகாண மக்களிற்கும், சஜித்திற்கும் இடையில் மனோ கணேசனாகிய நான் இணைப்பு பாலமாக இருப்பேன்.

நான் இன்று உங்கள் மத்தியில் வந்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கின்றேன் என்றால் அதற்கு பின்னால் எனக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. கடமை, கடப்பாடு இருக்கின்றது.

உங்களது வாக்குகளை வாங்கி அவர்களுக்குக் கொடுத்துவிட்டு என்னால் ஒதுங்கியிருக்க முடியாது. அந்த பழக்கம் மனோ கணேசனுக்கு கிடையாது. எங்கள் அரசாங்கத்திற்குள் நான் சண்டைப் போடுவேன். தேவையான உரிமைகளைப் பெற்றுக் கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.