சஜித்திற்கு ஆதரவாக கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தினை புறக்கணித்த மக்கள்

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டி பெரியளவில் கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.

அத்துடன் இக்கூட்டத்திற்கு ரெலோ கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இருப்பினும் குறித்த கூட்டத்தில் மக்கள் பெரியளவில் கலந்து கொள்ளவில்லையெனவும், 70 பேர் வரையிலேயே மக்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கிடையில் கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.