புதிய ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது!

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருப்பதாகவும் சட்டரீதியாக 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனவும் கலாநிதி குமுது குசும்குமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எந்த ஜனாதிபதியாக இருந்தாலும் தனக்கு சார்பான அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பது சாதாரணமானது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் பிரதானியாக ஜனாதிபதி செயற்படுவார்.

முப்படைகளுக்கு கட்டளையிடுவது, அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பது போன்ற அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உள்ளன. நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் இருப்பதால் அடுத்த ஜனாதிபதி பெயரளவிலான ஜனாதிபதியாக இருக்க மாட்டார்.

சுயாதீனமாக சிந்தித்து நாளைய தினம் வாக்களிக்க வேண்டியது அனைத்து பிரஜைகளின் கடமை. அத்துடன் மிகவும் அமைதியான முறையில் வாக்க வேண்டும் எனவும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.