பிரதான வேட்பாளர்கள் வாக்களிக்கவுள்ள இடங்கள் வெளியாகியுள்ளன!

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளைய தினம் ஹம்பாந்தோட்டை அபயபுர சுரனிமல கனிஷ்ட வித்தியாலயத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தனது வாக்கை அளிக்க உள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பஞ்சிகாவத்தை அபயசிங்கராம விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, மிரிஹான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.