ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டிய பொலிஸ் திணைக்களம்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, இலங்கை பொலிஸ் திணைக்களம் நன்றி பாராட்டியுள்ளது.

பொலிஸ் திணைக்களத்திற்காக வழங்கிய சேவையை பாராட்டும் வகையில் இன்றைய தினம் பொலிஸ் திணைக்களம் நன்றி பாராட்டியுள்ளது.

விசேட மரியாதை அணி வகுப்பு ஒன்றும் ஜனாதிபதிக்காக நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மிகச் சிறந்த ஓர் பொலிஸ் சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பங்களிப்பினை பாராட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துறைசார் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு இந்த பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.