ஜனாதிபதி மைத்திரியின் விசேட அறிக்கை!

Report Print Rakesh in அரசியல்

"இலங்கையில் நாளை 16ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கைப் பதிவு செய்வதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றிரவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது பணிப்புரைக்கமைய பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

தேவையற்ற பிரசாரங்களையும் வதந்திகளையும் நம்பி ஏமாறாது மக்கள் தமக்கான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ள ஒரு நாட்டில் பிரஜைகளின் அதிகாரமாகவும் முதன்மை கடமையாகவும் பொறுப்பாகவும் அமைவது தமது விருப்புக்குரிய ஒருவருக்காகத் தமது வாக்கைப் பதிவு செய்வதே ஆகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.