கோத்தபாய ராஜபக்சவிற்கு அமைச்சர் மங்கள சவால்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

இன்னும் சில மணித்தியாலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

குடியுரிமை தொடர்பிலான அதிகாரபூர்வமான ஆவணமொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மங்கள, கோத்தபாய ராஜபக்சவிற்கு சவால் விடுத்துள்ளார்.

போலி செய்திகளை வெளியிடுதல் மற்றும் சேறு பூசுதல்களை தவிர்த்து உண்மையான ஆவணங்களை வெளியிடுமாறு அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் குடியுரிமை குறித்த உண்மை ஆவணங்களை அம்பலப்படுத்துமாறு மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.