அமைச்சர் றிசாட்டுக்கு எதிராக முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் றிசார்ட் பதியூதீன், புத்தளத்தில் வசிக்கும் வாக்காளர்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு அழைத்துச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் அவர் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சுமார் 200 பேருந்துகளை பயன்படுத்தி புத்தளத்தில் வசிக்கும் வாக்காளர்களை வாக்களிப்பதற்காக மன்னாருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் புத்தளம் பேருந்து சாலை பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.