வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரி உரை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி காரியாலயம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இலங்கையின் ஆறாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக இறுதியாக இன்றைய தினம் மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.