மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்! றிஷாட் பதியுதீன்

Report Print Ashik in அரசியல்

இந்த நாட்டில் வாழ்கின்ற பௌத்த, இந்து, கத்தோலிக்க , முஸ்ஸிம் மக்களின் ஏகோபித்த தலைவராக இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை இடம் பெற்றது. இதன் போது மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே றிஷாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் தலைவரை தெரிவு செய்கின்ற இத்தேர்தலிலே குறிப்பாக வன்னி மாவட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் மக்கள் சுமூகமாக வாக்களிக்கின்றனர்.

எதிர்தரப்பினர் வாக்குகளை குழப்புவதற்காக சதிகளை மேற்கொண்டாலும் மக்கள் சதிகளையும் தாண்டி வாக்களிப்பதை காணக்கூடியாதாக உள்ளது.

குறிப்பாக இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் இருந்து அவர்களின் வாக்குகளை அளிப்பதற்காக பேருந்துகளில் மன்னார் வருகின்ற போது அடாவடி புரிகின்ற எதிர்க் கட்சியினர் மக்கள் பயணித்த வாகனங்களை தாக்கி அடித்து பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

எனினும், மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று அத்தனை அராஜகங்களையும் தாண்டியும் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.

இத் தேர்தலிலே இந்த நாட்டில் வாழ்கின்ற பௌத்த,இந்து, கத்தோலிக்க,முஸ்ஸிம் மக்களின் ஏகோபித்த தலைவராக இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.