பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையை மக்கள் உரிய வகையில் செய்து கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி மாயனூர் வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளித்தார்.
கடந்த காலங்களில் தேர்தல் நடவடிக்கைகளில் குழப்பங்கள் செய்த தரப்பே இம்முறையும் குழப்பங்களை மேற்கொள்ள முயல்கிறது எனவும் ஆனாலும் எமது மக்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.