திருகோணமலையில் தமது வாக்கினை பதிவு செய்த இரா.சம்பந்தன்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தமது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் காலை 10.15 மணியளவில் பாதுகாப்புக்கு மத்தியில் தமது வாக்கினை பதிவு செய்ய சென்றிருந்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தமது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

அந்தவகையில், இன்று மாலை 5 மணிக்கு வாக்களிப்பு பணிகள் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - முபாரக்