பதுளையில் வன்முறை - பெண்ணொருவர் மீது வாள்வெட்டு - மூவர் வைத்தியசாலையில்

Report Print Vethu Vethu in அரசியல்

பதுளையில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒஹிய ரயில் நிலையத்தில் அரசியல்வாதி ஒருவருக்கும் எதிர்தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.