மக்களின் வாக்குகளே தலைவரை தீர்மானிக்கும்! சிவமோகன் எம்.பி

Report Print Varunan in அரசியல்

இலங்கைக்கான புதிய அரச தலைவரை, வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளே தீர்மானிக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான, வாக்குப் பதிவுகள் இன்றையநாள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தமது வாக்கினைப் பதிவுசெய்தார்.

இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அரச தலைவர் வாக்களிப்பு சுமூகமான நிலையில் இடம்பெற்று வருகின்றது.

நட்டில் ஒரு சுமூமான நிலையை ஏற்படுத்துவதற்காக, எமது வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

புதிய அரச தலைவரைத் தெரிவு செய்யப்போவது வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்பது என்னுடைய கருத்து.

எனவே, உறுதியாக இந்த ஜனநாயக சூழலை உறுதிப்படுத்தி மேலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக இந்த வாக்களிப்பில் மக்களது தெரிவு சரியாக இருக்குமென நம்புகின்றேன்.

இந்த ஜனநாயக சூழலினை உறுதிப்படுத்திக் கொண்டு, மேலும் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு, எமது தமிழ் மக்களுக்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதே எமது நோக்கம்.

அந்த அடிப்படையில், எமது எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமென நாம் நூறு வீதம் நம்புகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் புதிய அரச தலைவரைத் தீர்மனிக்கின்ற சரித்திரம் வாய்ந்த முடிவாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.