நுவரெலியாவில் சீரற்ற காலநிலை! வாக்கெண்ணும் பணிகளுக்கு பாதிப்பா...?

Report Print Jeslin Jeslin in அரசியல்
180Shares

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கு 75 சதவீதம் வாக்குகள் செலுத்தப்பட்டிருப்பதாக அம்மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.புஷ்பகுமார எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இன்று முற்பகல் காலநிலை சீராக இருந்த போதிலும் தற்போது நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடையவுள்ள நிலையில் வாக்குப்பெட்டிகளை, வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்ட அவர் இதன்காரணமாக வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தாமதமாகும் என குறிப்பிட்டார்.