நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய இறுதி உரை

Report Print Malar in அரசியல்

பக்கச்சார்பற்ற ஜனாதிபதியாக இனிவரும் ஜனாதிபதி செயலாற்றுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாளையதினம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய இருக்கின்ற நிலையில் தாம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முகமாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

தாம் ஜனாதிபதியாக வேட்பு மனு தாக்கல் செய்த தருணத்தில் இருந்து இதுவரை பக்க சார்பாக செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

நான் கேட்டுக்கொள்கின்றேன் நான் விட்டு செல்லும் அபிவிருத்தி பணிகளை தெரிவாகும் ஜனாதிபதியாராக இருந்தாலும் அவற்றை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நான் பணி செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செயல்படவும் எனவும் கேட்டு கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நான் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நாட்டில் ஜனநாயகத்தை கட்டித் காத்து நடவடிக்கை எடுத்தேன். நாட்டில் இதுவே ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு ஜனாதிபதி தேர்தலாகும். நான் ஆட்சியில் இருந்தக் காலத்தில் சவால்களுக்கே முகம் கொடுத்தேன்.

நாட்டு மக்களுக்கு சுதந்திரமும், அபிவிருத்தியும் தேவை. ஆனால், என்னுடன் முரண்பாடு ஏற்படக் காரணம் நான் உள்நாட்டு அபிவிருத்தியை மேம்படுத்தினேன். ஆனால், சர்வதேச பொருளாதாரத்தை சிலர் நம்பி இருந்தார்கள். நிறைவேற்று அதிகாரத்தை நான் உபயோகிக்கவில்லை என சிலர் கூறினார்கள்.

ஆனால், அது அப்படியில்லை. நான் அதிகாரத்தை உபயோகித்தேன். எனது ஆட்சியில் ஏற்பட்ட கவலைக்கிடமான ஒரு சம்பவமாக நான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை குறிப்பிடலாம்.

எனது அரசியல் வாழ்க்கையில் அதற்கு அடிக்கல்லாக இருந்த எனது மனைவி ஜயந்தி மற்றும் எனது பிள்ளைகள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது ஜனாதிபதி பதவியில் இருந்து நான் இன்று விலகி கொள்கிறேன். நாளை புதிய ஜனாதிபதி பதவியேற்பார். அவருக்கு எனது ஆசீர்வாதத்தை கூறிக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல எனது பதவிக் காலத்தில் நான் நாட்டின் பாதுகாப்பு குறித்து சிறந்த சேவையாற்றினேன்.

பதவியில் இருந்து விலகிச் சென்றாலும் பாதூகாப்பு தொடர்பிலான சிக்கல்களில் நாட்டுக்காக நான் செயல்படுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 06ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

அதற்கு முன்னர் அவர், சுகாதார அமைச்சராகவும் விவசாயத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மேலும் நாட்டின் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்ற போது பாதுகாப்பின் அமைச்சின் பணிகளை அவரே மேற்கொண்டிருந்தார்.

அதேபோல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்த இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் நிறைவுடைந்துள்ள நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தினார்.