தேர்தல் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

சுதந்திரம், அமைதி மற்றும் சுயாதீனமான தேர்தலை நடத்த முடிந்தமை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு உட்பட சகல அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சென்ற போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த விசேட தேர்தல் நடவடிக்கை மையத்தையும் பார்வையிட்டுள்ளார்.