இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார் கோத்தபாய ராஜபக்ச

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளதுடன், குறித்த இடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட பல அரசியல் முக்கியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளரான கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தனது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.