ஜனாதிபதியாக பதவியேற்கும் கோத்தபாய! ரணில் விடுத்துள்ள பணிப்புரை

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்கும் நிகழ்வு அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய வளாகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்று நிகழ்வில் அமைச்சர்களையும் கலந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை அமைச்சர்களுடான சந்திப்பின் போது இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பதவியேற்கும் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.