புதிய நாடாளுமன்றத்தை கூட்ட நாடாளுமன்ற தேர்தல்! அமைச்சர் மனோ வெளியிட்டுள்ள தகவல்

Report Print Sujitha Sri in அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மக்கள் ஆணை கிடைத்துள்ளது, அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் பிற்பகல் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இரண்டு மணித்தியாலங்கள் வரையில் தொடர்ந்த இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பின் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கோத்தபாய ராஜபக்சவிற்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தற்போதைய தீர்மானத்திற்கு அமைய பிரதமர் அவருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதாயின் எந்தவித பிரச்சினையும் இல்லை.

அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி, சபாநாயகரோடு கலந்துரையாடி, கட்சித் தலைவர்களோடு கலந்துரையாடி முன்னோக்கி செல்வோம் பிரச்சினையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.