இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் சின்னம் என்ன தெரியுமா?

Report Print Varun in அரசியல்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ஜனாதிபதி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

தூய்மையின் சின்னமான வெண்தாமரை மலரே அவரது உத்தியோகபூர்வ ஜனாதிபதி சின்னமாகும்.

நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியும் தூய்மையானவர் என்பதனை அதன் மூலம் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

நாட்டை ஆண்ட ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி கொடியின் கீழ் ஒரு சின்னம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகிறது.

இலங்கையை இதுவரையில் 7 ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளதுடன் தற்போது புதிதாக தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக்ஸ 8 ஆவது ஜனாதிபதியாவார்.

இருந்தாலும் இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ குடியரசின் தலைவராகவே காணப்பட்டார். அதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார்.

அந்தந்த ஜனாதிபதிகள் உபயோகித்த உத்தியோகபூர்வ கொடிகளை கீழே காணலாம்.

வில்லியம் கோபல்லாவ - 1962 - 1978

ஜே .ஆர் .ஜெயவர்தன 1978 - 1989

ஆர். பிரேமதாச 1989 - 1993

1993 - 1994 D .B .விஜயதுங்க

சந்திரிகா குமாரதுங்க 1994 - 2005

மகிந்த ராஜபக்ஷ 2005 - 2015

மைத்திரிபால சிறிசேன 2015 - 2019