மக்களின் விருப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகும் சம்பிக்க

Report Print Banu in அரசியல்

அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததையடுத்து அவரை ஆதரித்த அமைச்சர்கள் தம் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகமுன்னணியுடன் இணைந்து செயற்பட்டுவந்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டலி சம்பிக்க தமது அமைச்சுப் பதவியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர், மக்களின் அதிக விருப்பு வாக்குகளால் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்களின் இம் முடிவை நான் ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, அஜித் பெரேரா, ஹரின் பெர்ணான்டோ, ருவான் விஜேவர்தன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.