அவசரமாக கூடும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Banu in அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமரால் நேற்று வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ் அறிக்கையில் மேலும்,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து சபாநாயகர் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கத் தயாராகி வருகிறேன்.

இது குறித்து ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் விவாதிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஸவிற்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.