சீனா பொருளாதார பங்காளி! இந்தியா தொடர்பில் கோத்தபாயவின் கருத்து

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்தியா எமது அயல் நாடு, சீனா எமது பொருளாதார பங்காளி என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவும் சீனாவும் எமது அயல் நாடுகள், எப்போதும் எமது நீண்ட கால நண்பர்களாகவும் உள்ளன. எல்லா நாடுகளும் முக்கியம்தான், ஆனால் இந்தியா எமது அயல்நாடு. சீனா பொருளாதார பங்காளி என குறிப்பிட்டுள்ளார்.