ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள சர்வதேச முக்கியஸ்தர்கள்!

Report Print Varun in அரசியல்

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான இலங்கை தூதரகத்தின் ஊடக அவர் இந்த வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தமது குறிக்கோள் என அவர் தனது வாழ்த்து செய்தியின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் புதிதாய் பதவியேற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சீனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பை பேணி தொடர்ந்தும் ஒன்றிணைந்து சேவையாற்ற தயார் என சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் பீஜிங் தலை நகரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டார்.

சீனாவின் ஒரே போக்கு, ஒரே வழி என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக சத்தியப்பிரமாணம் செய்த இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தாமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வே டுவிட்டரில் அவர் இந்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்து அதன் மூலம் இரு நாட்டின் நட்பை வளர்க்க தாம் ஆவலுடன் இருப்பதாக தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.