சிங்கள பௌத்த கொள்கைகளை புதிய அரசாங்கம் முன்னிலைப்படுத்த வேண்டும்! கோத்தபாயவிடம் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

சிங்கள பௌத்த கொள்கைகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசாங்கம் செயற்பட வேண்டுமென கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அல்பிட்டியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் தெளிவாக வெளியாகியுள்ளது.

சிங்கள பௌத்த கொள்கைகளை புறந்தள்ள முடியாது என்பது இந்த தேர்தலின் போது வாக்காளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தின் கீழ் ஏனைய இனங்களின் உரிமைகளை உறுதி செய்ய முடியும் என்பதனை அனைவரினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்த கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எதிர்காலமொன்று தேவை என்றால் ஜே.வி.பி.யும் சிங்கள பௌத்த கொள்கைகளை ஏற்க வேண்டியது அவசியமானது.

சிங்கள பௌத்தர்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கிய அரசாங்கம் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் காத்திருக்காது நாடாளுமன்றை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.