மங்களவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள ஜினாநந்த தேரர்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அத்துலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

கோத்தபாயவின் வெற்றியை அடுத்து மங்கள சமரவீர வெளியிட்ட தமது டுவிட்டர் பதிவில் பௌத்தத்தை இழிவுப்படுத்தியுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த முறைப்பாட்டை பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டுக்காக கண்ணீர் சிந்துவதாகவும் மும்மணிகளும் பௌத்த மற்றும் தர்மம் என்பன இலங்கையுடன் இருக்கவேண்டும் என்று தாம் வேண்டுவதாகவும் மங்கள சமரவீர தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.