எதிர்வரும் 24 மணிநேரத்தில் பதவி விலகும் பிரதமர் ரணில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய தேசிய முன்னணி உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்தும், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு தேவையான, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்த பின்னர், பதவி விலகுவார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.

எனினும், இருவருக்கும் இடையிலான முறைப்படியான சந்திப்பு இன்று அல்லது நாளை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.