கடமைகளை பொறுப்பேற்க உள்ள புதிய ஜனாதிபதி! ஜனாதிபதியின் செயலாளர் இவரா?

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை காலை தமது உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தநிலையில், ஜனாதிபதியின் செயலாளராக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயசுந்தர அனைத்து அரச பதவிகளையும் வகிப்பதில் இருந்து தடைசெய்யப்பட்டார்.

எனினும், பின்னர் 2009ஆம் ஆண்டு அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் ஜெயசுந்தர சிங்கப்பூருக்கு சென்றார்.

தற்போது மீண்டும் அவர் அரச சேவையில் இணைகிறார். இதேவேளை இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய இன்று அநுராதரப்புரத்தில் வைத்து சத்தியபிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.