புதிய ஜனாதிபதிக்கு இருக்கும் சவால்! அல்ஜெஸீரா செய்தியாளர்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் சரிந்துப்போயுள்ள இலங்கையின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டியேற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அல்ஜெஸீராவின் செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவிடம் அதிகளவான கடன்களை பெற்றதன் அடிப்படையில் இலங்கை கடந்த 15 வருடங்களாக பாரிய கடன்சுமைக்கு உள்ளாகியுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 21ம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறையும் பாரிய பாதிப்புக்கு உள்ளானது. இன்று இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 வீதமான 34.4 பில்லியன் டொலர்கள் கடன்சுமைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது 15 வீத பெறுமதி சேர் வரியை குறைக்கப்போவதாகவும் ஏனைய வரிகளை அகற்றப்போவதாகவும் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

எனினும் இந்த பொறுப்புக்கள் சவால் மிக்கவை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.