கோத்தபாயவின் வெற்றியை பால்சோறு கொடுத்து கொண்டாடிய தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்

Report Print Thileepan Thileepan in அரசியல்

ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றிக்காக பால்சோறு வழங்கும் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் அலுவலகம் முன்னால் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்தமையை பால்சோறு கொடுத்து கொண்டாடிய நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் கலந்து கொண்டார்.

கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வாக்கு போட வேண்டாம் என மக்களிடம் கூறிவிட்டு அவரின் வெற்றிக்காக பால்சோறு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களை பிரித்து விட்டு அரசியல்வாதிகள் சிலர் சுயநலமாக நடந்து கொள்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள், பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சி, உள்ளூர் மட்ட உறுப்பினர்கள் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.