இலங்கையுடன் இணைந்து பணியாற்ற ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை மனித உரிமை தொடர்பான அர்ப்பணிப்புக்களை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை பேச்சாளர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் இன்றி முடிவடைந்துள்ளது.

இது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் ஜனநாயக நிறுவகங்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் வெளிநாட்டுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பை நல்கவும் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடரவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், நாட்டை ஒற்றுமைப்படுத்தவும் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.