இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது தவறிழைத்த பேஸ்புக் நிறுவனம்!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான 48 மணித்தியால பிரச்சார அமைதி காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க பேஸ்புக் நிறுவனம் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தலை கண்காணிக்க வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவினர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது குழுவின் தலைவர் மரீஸா மார்டிஸ் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களை இலங்கையின் தேர்தல்கள் ஆணையகம் அமைதிக்காலமாக பிரகடனப்படுத்திருந்தது.

இதன்போது பிரச்சாரங்களை கைவிடுமாறு ஆணையகம் கோரியிருந்தது. எனினும் இந்தக்காலத்தில் இனபதற்றம்,வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தடுப்பதில் பேஸ்புக் தவறிவிட்டது என்று மரீஸா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 18 வயதை அடைந்த சுமார் 200000 பேருக்கு இந்தமுறை வாக்களிக்க முடியாமல் போனது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலுக்குள் புதியவர்களை சேர்க்காமையே இதற்கான காரணமாகும்.

இதேவேளை இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு உரிய வகையில் பேணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.