நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை வழங்க முடியாது!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதன், பின்னர் ஊடகங்களுக்க கருத்து வெளியிட்ட அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வழங்கும் ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய நான்கரை வருடங்கள் வரை நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.