சஜித்தின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நபர் ஒருவர் தற்கொலை

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மனைவி கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் திருமணம் செய்து 30 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் சண்டையிட்டதில்லை. எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிரேமதாஸ மீது கணவருக்கு அதிக அன்பு இருந்தது. அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சிகே ஆதரவு வழங்கினார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். சஜித் தோற்று விடுவார் என்ற பயத்தில் அவர் நன்கு குடித்தார். பின்னர் தோல்வியடைந்த விடயம் தெரிந்தவுடன் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷமருந்தியுள்ளார்.

அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது காப்பாற்ற முடியாமல் போய் விட்டது எனத் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.