ஆட்சி மாற்றத்தினால் தமிழ் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

Report Print Mohan Mohan in அரசியல்

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளினால் மேற்கொள்ளப்படவிருந்த இலங்கை வரும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இலங்கைக்கு வருகைதர முயற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தின் காரணமாகவே இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2011ஆம் ஆண்டியில் இருந்து சுமார் 1720 குடும்பங்கள் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக புள்ளிவிபரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள 109 முகாம்களிலும் 64 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாகவும் இந்தியா முழுவதுமாக 1 இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழ் அகதிகள் இருப்பதாகவும் அறியப்படுகின்றது.