சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி மீண்டும் பொறுப்பேற்றார்?

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன கட்சி சாரா கொள்கையொன்றை பின்பற்றுவதாக அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில், அவர் தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து தற்காலிக அடிப்படையில் விலகியதுடன், தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் கட்சித் தலைவர் பதவியை மீளவும் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.