அமைச்சர்கள் விலகியது நியாயமானது! எஸ்.எம்.சந்திரசேன

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியமை நியாயமான விடயம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியில் மிகப் பெரிய மக்கள் நிலைப்பாடு கட்டியெழுப்பட்டுள்ளது. இந்த மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய அதனை நாடாளுமன்றத்திலும் கட்டியெழுப்ப சந்தர்ப்பத்தை வழங்குவது மிகவும் ஜனநாயமாக விடயம்.

அமைச்சர்கள் பதவி விலகியமை நியாயமானது. பதவி விலகியதன் மூலம் அவர்கள் சமிக்ஞை ஒன்றை வழங்கியுள்ளனர் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.