ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் அவரது கொள்கை அறிக்கை என்பன தோல்வியடைந்துள்ளதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்க தார்மீக உரிமை இருக்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
பிரதமர் பதவியில் கட்டாயம் மாற்றம் ஏற்பட வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதால், அவரது கொள்கை அறிக்கையும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த கொள்கை அறிக்கையை அமுல்படுத்த வேண்டும். புதிய ஜனாதிபதி தனது கொள்கையை அமுல்படுத்த பிரதமர் இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடடுள்ளளார்.