உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியல் நெறிமுறையை மதிக்க வேண்டுமாயின் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் தற்போதைய ஆட்சியாளர்கள் அரசியல் நெறிமுறையை ஆரம்பித்துள்ள சந்தர்ப்பத்தில் அதனோடு முன்நோக்கி செல்வார்கள் என நம்புகிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சியை டி.எஸ்.சேனாநாயக்க போன்ற உன்னதமான மனிதர்கள் உருவாக்கினார்கள் என்பதால், அந்த பின்னணியில் அந்த கட்சியினர் மீண்டும் ஒரு முறை மக்கள் முன் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

இரண்டு முறை மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்துள்ளதால், அவர்கள் தமது அரசியல் பலத்தை தெரிவு செய்ய இருக்கும் ஒரே சந்தர்ப்பம் நாடாளுமன்றத்தில் திருப்தி அல்லது அதிருப்தியை உரசி பார்க்க வேண்டும். அது ஜனநாயகத்தின் அடிப்படை அடையாளம் என நம்புவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.