அரசியலில் இருந்து விலகப் போவதில்லை: கருணாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதியமைச்சர் பதவியில் இருந்து மாத்திரம் விலகுவதாகவும் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை எனவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனது ஊழியர்கள் மற்றும் தனக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அரச வளங்களையும் மீண்டும் அமைச்சிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் மாத்திரமல்ல எனது பரிந்துரையில் நியமிக்கப்பட்ட அரச நிறுவனத்தின் ஒரே தலைவரான ரவி ஜயவர்தனவும் பதவி விலகியுள்ளார்.

இம்மாதம் 25 ஆம் திகதிக்குள் எனது ஊழியர்கள் மற்றும் எனக்கு வழங்கப்பட்ட அரச சொத்துக்கள் அனைத்தும் அமைச்சிடம் ஒப்படைப்போம்.

நான் பணியாற்றிய அமைச்சுக்கள் மற்றும் அதன் நிறுவனங்களில் எனது புகைப்படத்தை காட்சிக்கு வைக்கவில்லை.

இதனால், அரசியல்வாதிகளின் புகைப்படங்களை அகற்றும் கொள்கைக்கு இலகுவான நிலைமை நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சுக்கு கிடைத்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் செய்தால் மிகவும் நல்லது. நான் பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளேன் அரசியலில் இருந்து அல்ல எனவும் கருணாரத்ன பரணவித்தான குறிப்பிட்டுள்ளார்.