மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க?

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இறுதி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலாநிதி நந்தலால் வீரசிங்க தற்போது இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநராக கடமையாற்றி வருகிறார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக வேறு ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியை நியமிக்க எடுத்துள்ள தீர்மானம் சிறப்பானது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.